Archive for May, 2016

Un Kannai Paartha Piragu En Ulla

Friday, May 20th, 2016

பாடல்: உன் கண்ணைப் பார்த்த பிறகு, என் உள்ளே லட்சம் சிறகு

படம்: யுவன் யுவதி

இசை; விஜய் அந்தோணி

பாடியவர்கள்: கார்திக், ரம்யா

பாடலாசிரியர்: பிரியன்

வருடம்: 2011

உன் கண்ணைப் பார்த்த பிறகு, என் உள்ளே லட்சம் சிறகு

உன் ஓரப் பார்வை அசைவில் மனம் குடை சாயும் …

நீ வந்து போன பிறகு, தலை கீழாய் மாறும் உலகு

உன் இல்லம் இருக்கும் திசையில் திரியுதே என் பாதம்

தண் நீரில் ஆடும் அலையாய், காற்றோடு மிதக்கும் இலையாய்

என் மனதும் மாறுகின்றதே உனதாய்

சில நேரம் மிகவும் சுகமாய், சில நேரம் மிகவும் சுமையாய்

ஐயோ காதல் படுத்துகின்றதே புதிதாய் …

உன் கண்ணைப் பார்த்த பிறகு, என் உள்ளே லட்சம் சிறகு

உன் ஓரப் பார்வை அசைவில் மனம் குடை சாயும் …

அடி உன்னைப் போல பெண்ணை எங்கும் கண்டதில்லை

இன்று வரை என் மனதை யாருமே ஈர்த்ததில்லை … ஓ … ஓ … ஓ

உன் உதடு எந்தன் பேரை சொல்லும் நேரம்

சிலிர்க்கிறேன் தவிக்கிறேன் என் வசம் நானும் இல்லை… ஓ … ஓ

மழை நின்ற போதும் கிளைகள் சிறு தூறல் போடுவது போல்

நீ கடந்த பிறகும் நினைவில் இருப்பாய் …

உன் கண்ணைப் பார்த்த பிறகு, என் உள்ளே லட்சம் சிறகு

உன் ஓரப் பார்வை அசைவில் மனம் குடை சாயும் …

என்னை விட்டு உள்ளம் உந்தன் பின்னால் செல்லும்

தடுக்கிறேன் தவிக்கிறேன் இதயமும் கேட்கவில்லை… ஓ … ஓ … ஓ

நான் இன்று போல என்றும் சொக்கிப் போனதில்லை

இதற்குமுன் எனக்கிந்த பரவசம் பாய்ந்ததில்லை… ஓ … ஓ

நீ நேற்று எங்கு இருந்தாய் என் நெஞ்சில் இன்று நுழைந்தாய்

இனி நாளை என்ன அவஸ்தயை புரிவாய் …

உன் கண்ணைப் பார்த்த பிறகு, என் உள்ளே லட்சம் சிறகு

உன் ஓரப் பார்வை அசைவில் மனம் குடை சாயும் …

நீ வந்து போன பிறகு, தலை கீழாய் மாறும் உலகு

உன் இல்லம் இருக்கும் திசையில் திரியுதே என் பாதம்

தண் நீரில் ஆடும் அலையாய், காற்றோடு மிதக்கும் இலையாய்

என் மனதும் மாறுகின்றதே உனதாய்

சில நேரம் மிகவும் சுகமாய், சில நேரம் மிகவும் சுமையாய்

ஐயோ காதல் படுத்துகின்றதே புதிதாய் …

Santhana Thenralai Jannalgal

Tuesday, May 10th, 2016

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா?

இசை: அ.ர. ரஹ்மான்

பாடல் ஆசிரியர்: வைர முத்து

பாடியவர்: சங்கர் மஹாதேவன்

திரைப்படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

ஆண்டு: 2000

பாடல்: சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டிப்பது

நேரம் [நி:விநா]

[0:00]                           இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்

இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்

இன்னும் இன்னும் எனக்கு ஓர் ஜன்மம் வேண்டும்

… … …

என்ன சொல்லப் … போகிறாய்?

[0:24] ♬

[0:39] சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா? … நியாயமா?

காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன மௌனமா? … மௌனமா?

அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே

அதை நானும் மெய்பிக்கத் தானே ஒரு ஆயுள் வேண்டுமே

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்

இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்

இன்னும் இன்னும் எனக்கு ஓர் ஜன்மம் வேண்டும்

என்ன சொல்லப் போகிறாய்?

என்ன சொல்லப் போகிறாய்?

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா? … நியாயமா?

காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன மௌனமா? … மௌனமா?

அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே

அதை நானும் மெய்பிக்க தானே ஒரு ஆயுள் வேண்டுமே

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்

இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்

இன்னும் இன்னும் எனக்கு ஓர் ஜன்மம் வேண்டும்

என்ன சொல்லப் போகிறாய்?

என்ன சொல்லப் போகிறாய்?

[2:16] ♬

[2:52] இதயமொரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி

இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி

கண்ணாடி பிம்பம் கட்ட கயிற் ஒன்றும் இல்லையடி

கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி

நீ ஒன்று சொல்லடி பெண்ணே! இல்லை என்று கொல்லடி கண்ணே!

எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்

என்னை துரத்தாதே உயிர் கரையெறாதே

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்

இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்

இன்னும் இன்னும் எனக்கு ஓர் ஜன்மம் வேண்டும்

என்ன சொல்லப் போகிறாய்?

என்ன சொல்லப் போகிறாய்?

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா? … நியாயமா?

காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா? … மௌனமா?

[4:03] ♬

[4:41] விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது?

பூ வாசம் வீசும் உந்தன் கூந்தலடி

இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது?

கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி

பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி

என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன

என்னை புரியாதா இது வாழ்வா சாவா?

[5:15] ♬

[5:26] என்ன சொல்லப் போகிறாய்? என்ன சொல்லப் போகிறாய்?

என்ன சொல்லப் போகிறாய்? என்ன சொல்லப் போகிறாய்? நியாயமா?

நியாயமா?

என்ன சொல்லப் போகிறாய்? என்ன சொல்லப் போகிறாய்? மௌனமா? மௌனமா?

என்ன சொல்லப் போகிறாய்? [5:59]