ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்

படம்: நான் அவன் இல்லை

பாடல்: ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்

பாடலாசிரியர்: பா.விஜய்

பாடியவர்கள்: ஜெயதேவ், சங்கீதா இராஜெஸ்வரன், மேஹா, இரம்யா, ஷிபா

இசை: விஜய் அந்தோணி, டி. இமாம்

வருடம்: 2007

 

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு

ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு

இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் அளந்தேன்
பறந்தேன்

நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு

சம்மதமா சேலை போர்வை போர்த்தி கொண்டு நீ தூங்க
சம்மதமா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட

சம்மதமா என்னை உந்தன் கூந்தலுக்குள் குடியேற்ற
சம்மதமா எனக்குள் வந்து கூச்சம் ஊட்டிட

கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்
உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்

உள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம்
உன்னை தோளில் சாய்த்து கொண்டு போக சம்மதம்

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு

ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு
This is the way to go, this is ecstasy

This song is just a way to celebrate

We were so meant to be, yo!

 

This is indescribable Can’t you see

Knock me down yo! Baby can’t believe

Just is survival destiny, yo!
காதல் என்னும் பூங்கா வனத்தில் பட்டாம் பூச்சி ஆவோமா
பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கிப் போவோமா

காதல் என்னும் கூண்டில் அடைந்து ஆயுள் கைதி ஆவோமா
ஆசை குற்றம் நாளும் செய்து சட்டம் மீறம்மா

லட்சம் மின்னல் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன்
காதல் கொண்ட போதில் தன்னை நேரில் பார்க்கிறேன்

எந்த பெண்னை காணும் போதும் உன்னை பார்க்கிறேன்
உன்னை காதல் செய்து காதல் செய்தே கொல்லப் போகிறேன்

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு

ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு

இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் அளந்தேன் பறந்தேன்

நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அழைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு

 

eanenakkumayakkam

Leave a Reply

You must be logged in to post a comment.